இந்திய சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளாக சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்துடன் சினிமாவில் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த்…..
தன்னுடைய வாழ்க்கையை பஸ் கண்டக்டர் என்ற சிறு புள்ளியிள் தொடங்கி இன்று உலகமக்கள் அனைவரும் அன்னார்ந்து பார்க்கும் அளவிற்கு கோட்டிகளை சம்பளம் பெற்று இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
பல சூப்பர்ஹிட் அடைத்த படங்களை கொடுத்த ரஜினிகாந்திற்கு சினிமாவில் தனக்கென ஒரு தனி ராசிகள் பட்டாளத்தியே வைத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பிரபல சின்னத்திரை இயக்குனர் திருச்செல்வனின் நண்பர் ஒருவர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்.
அப்போது அவரிடம் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் குறித்து பேசியுள்ளாராம் ரஜினிகாந்த்.
அவருக்கு மிகவும் பிடித்த சீரியல் என்றும், தனது வீட்டில் தொடர்ந்து அந்த சீரியலை பார்த்து வருவதாகவும் ரஜினிகாந்த் கூறியுள்ளாராம். இதனை எதிர்நீச்சல் சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.