பிக்பாஸ் வீட்டில் அந்த நடிகை போகிறாரா.? இதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீங்க.. !!

Advertisements

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. ரசிகர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ள பிக்பாஸ் சீசன் 6 சண்டை சச்சரவு என விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

இந்த 6வது சீசன 50 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடுகிறது. 21 போட்டியாளர்கள் இடம்பெற தொடங்கப்பட்ட ஒவ்வொரு வாரமும் ஒரு எவிக்ஷன் நடந்து வருகிறது, இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடம் அதிகம் உள்ளது.

அதிலும் இந்த வாரம் டபுள் எவிக்ஷ்ன் என்கின்றனர், எந்த இருவர் வெளியே செல்ல இருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisements

இந்த நிலையில் தான் பிக்பாஸ் வைல்ட் கார்ட்டு என்ட்ரி குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.

தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து டாப் நாயகியாக வலம் வந்த நடிகை அஞ்சலி பிக்பாஸ் 6வது சீசனிற்குள் நுழைய இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அவர் Fall படத்தின் புரொமோஷனுக்காக வர இருப்பதாக கூறுகின்றனர். ரசிகர்கள் மத்தியில் அவர் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக நுழைய இருப்பதாக பேசப்படுகிறது. எது உண்மை என்பதை பொறுத்திருந்து காண்போம்.

 

Advertisements

Leave a Comment