வீட்டில் இப்படி பட்டவரா நயன்தாரா..? வீட்டு ரகசியத்தை ஒரே அடியாக போட்டுடைத்த விக்னேஷ் சிவனின் அம்மா..!!

Advertisements

நயன்தாரா லேடி சூப்பர்ஸ்டார் என சொல்லும் அளவுக்கு தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். அவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்……

அவர்கள் தற்போது வாடகைத்தாய் முறையில் 2 ஆண் குழந்தைகள் பெற்று இருக்கிறார்கள். அது பெரிய சர்ச்சையான நிலையில், பதிவு திருமணம் பல வருடங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது என அவர்கள் பற்றிய உண்மை வெளியானது. அதனால் சர்ச்சை தற்போது அடங்கி இருக்கிறது.

Advertisements

நயன்தாராவை பற்றி தற்போது விக்னேஷ் சிவனின் அம்மா பேசி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

“நயன்தாரா வீட்டில் 8 பேர் வேலை செய்கிறார்கள். நான்கு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள். ஒரு முறை பணியாளராக இருக்கும் பெண் சோகமாக இருப்பதை பார்த்து என்ன ஆச்சு என நயன் கேட்டார். தனக்கு 4 லட்சம் கடன் இருக்கிறது என அந்த பெண் சொன்னதும் உடனே அந்த பணத்தை கொடுத்து கடனை அடைத்துவிடும்படி கூறினார். என் கண் முன்னே நடந்தது இது.”


“அதேபோல கேரளாவில் இருக்கும் நயன்தாராவின் அம்மாவும் உதவுகிறார். பணியாளருக்கு கஷ்டம் என அறிந்து கையில் இருக்கும் வளையலை அவர் கழற்றி கொடுத்திருக்கிறார்” என விக்னேஷ் சிவனின் அம்மா தெரிவித்து இருக்கிறார்.

 

Advertisements

Leave a Comment