வலிமை படத்திற்கு பிறகு நடிகர் அஜித் நடித்துள்ள திரைப்படம் துணிவு. வினோத் இயக்கிய இந்த திரைப்படம் எதிர்வரும் பொங்கல் அன்று திரைக்கு வர இருக்கிறது.
இப்படத்திற்கு அஜித் நடிக்கும் புதிய படத்திற்கு எதிர்பார்ப்புகள் தற்போது அதிகரித்துள்ளது. அதுக்கு முக்கிய காரணம் இந்த படத்தினை இயக்க இருப்பது, நடிகை நயன்தாராவின் கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் தான்.
துணிவு படம் ரிலீஸ் ஆனதும் ஏகே 62 படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே தற்போது ஏகே 62 படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் படுஜோராக நடைபெற்று வருகிறது.
அதன்படி தற்போது அஜித்துடன் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் தேர்வை நடத்தி வருகிறாராம் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
அந்த வகையில் ஏகே 62 படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க நடிகர் தனுஷிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தை தற்போது ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறதாம். இதற்கு தனுஷ் மட்டும் ஓகே சொல்லிவிட்டால் ரோலெக்ஸ் சூர்யா ரேஞ்சுக்கு அவரது வில்லன் கேரக்டர் பேசப்படும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
அதுமட்டுமின்றி விக்னேஷ் சினிமா கெரியரில் மிகவும் முக்கியத் திரைப்படமாக பார்க்கப்படும் நானும் ரவுடி தான் படத்தை தயாரித்தவரும் தனுஷ் தான்.
இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருப்பதால் ஏகே 62-வில் நடிக்க தனுஷ் ஓகே சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.