வாரிசு படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் மட்டும் இத்தனை கோடிகளா.? வியக்க வைக்கும் உண்மை..!!

0

தமிழ் திரையுலகில் வசூல் சக்கரவர்த்தியாக தன்னை நிலை நிறுத்தி இருப்பவர் தான் நடிகர் விஜய். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அவரது ரசிகர்கள் அவரை விட்டுக்கொடுக்க வில்லை.

அவருக்கான ஆதரவு குரலை நாடு முழுவதும் எதிரொலிக்கச் செய்து, இந்திய அளவில் பிரபலமான நடிகர்களின் பட்டியலில் முதல் இடத்தில் வைத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், தான் தெலுங்கு சினிமாவின் வெற்றி இயக்குனர் என போற்றப்படும் வம்சி அவர்களின் இயக்கத்தில் வாரிசு படத்தில் விஜய் நடித்து வருகிறார். தில் ராஜு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

ஆரம்பத்தில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி படக்குழுவை அதிர்ச்சியடைச் செய்தது.

இதனிடையே வாரிசு படத்திற்கான அடுத்தடுத்த அப்டேட்களை கொடுத்து அந்த தினங்களை ஸ்பெஷல் தினங்களாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று வெளியான புதிய அப்டேட்டில், டிசம்பர் 4ம் தேதி மாலை 4 மணிக்கு படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாக இருக்கிறது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து, ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், தான் இந்த படத்தில் நடித்து கொடுக்க வாங்கிய சம்பளம் விபரம் குறித்த தகவல் இணையத்தில் கசிந்து பலரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.

கடைசியாக பீஸ்ட் படத்திற்காக விஜய் அவர்கள் சுமார் ரூ. 80 கோடி வரை சம்பளம் பெற்றிருந்தாக கூறப்பட்ட நிலையில், தற்போது வாரிசு படத்திற்காக விஜய் ரூ. 125 கோடி வரை சம்பளம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்படத்திற்கும் இந்த புதிய படத்திற்கும் ரூ 45 கோடி அதிகமாகியுள்ளதால் விஜய்ரசிகர்களை மட்டுமின்றி பெரும்பாலானவர்களை சிந்திக்க வைத்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *