ஹன்சிகா திருமணத்திற்கு பிரம்மாண்டமாக தயாராகும் அரண்மனை.. ஒரு நாள் வாடகை மட்டும் இத்தனை கோடிகளா.?

Advertisements

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் விஜய், தனுஷ், சூர்யா, என டாப் நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி.

சமீபத்தில் இவரது 50-வது திரைப்படமான ‘மஹா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

 இந்த படம் அவருக்கு பெரும் ஏமாற்றத்தையே தந்தநிலையில், அடுத்ததாக தனது திருமணம் அறிவிப்பை வெளியிட்டு ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களையும் தன்பக்கம் ஈர்த்தார்.

அவரது நீண்ட நாள் காதலர் சொஹைல் கதூரியாவை கரம்பிடிக்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதனையடுத்து இருவர் ரொமான்ஸ் செய்யும் போட்டோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

Advertisements

பின்னர் இவர்கள் எப்போது திருமணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் டிசம்பர் 4ம் தேதி ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இருக்கும் அரண்மனையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

திருமண கொண்டாட்டம் தொடங்கிவிட்டதுஇ மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற்ற அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.

இந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. அது என்ன தகவல் என்றால் நடிகை ஹன்சிகா திருமணம் நடக்கப்போகும் அரண்மனையின் ஒரு நாள் வாடகை மட்டுமே சுமார் ரூ. 60 கோடி வரை என்கின்றனர்.
இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரிய வில்லை

Advertisements

Leave a Comment