சின்ன குஷ்புவின் கடைசி பேச்சுலர் பார்ட்டி.. குடித்துவிட்டு தோழிகளுடன் அலப்பறை செய்யும் ஹன்சிகாவின் வைரல் வீடியோ.. !!

0

நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு வருகிற டிசம்பர் 4-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இவர் சோஹைல் கத்தூரியா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொள்ள உள்ளார்……

இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரண்மனை ஒன்றில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

நடிகை ஹன்சிகாவின் திருமணத்தை ஒளிபரப்பு செய்யும் உரிமையை ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் வாங்கி உள்ளதாம்.

ரூ.16 கோடி கொடுத்து இந்த உரிமையை அந்நிறுவனம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக திருமணத்திற்கு வரும் சிறப்பு விருந்தினர்கள் வீடியோ எடுக்கக்கூடாது என்கிற நிபந்தனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

நடிகை ஹன்சிகாவின் திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ள நிலையில், அவர் தனது தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி கொடுத்துள்ள வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

கிரீஸ் நாட்டில் இந்த பேச்சிலர் பார்ட்டியை தனது தோழிகளுடன் கொண்டாடி இருக்கிறார் ஹன்சிகா. இதுவரை இல்லாத வகையில் சிறப்பான முறையில் இந்த பேச்சிலர் பார்ட்டி நடந்ததாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் ஹன்சிகா.

அந்த வீடியோவில் பேச்சிலர் பார்ட்டியின் போது குடித்துவிட்டு தோழிகளுடன் ஆட்டம் போடும் வீடியோவையும், கையில் மதுவுடன் கிரீஸ் நகரின் வீதிகளில் வலம் வந்த வீடியோ மற்றும் அங்கு தனது தோழிகளுடன் மேட்சிங் மேட்சிங் உடையணிந்து எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார் ஹன்சிகா. இந்த வீடியோ சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகிறது.

https://www.instagram.com/p/ClbWek6DpFT/

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *