தமிழ் நாட்டுல ரஜினி, கமலுக்கு அடுத்தபடியா விஜய், அஜித் இருவர் தான்
போட்டி என ரசிகர்கள் இணையதளங்களில் அடித்துக் கொள்வது தற்போது அதிகரித்து இருக்கிறது.
இவர்கள் படங்கள் வெளிவந்தாலே போதும் அவரது ரசிகர்கள் அந்த நாளை திருவிழாவாக கொண்டாடி தீரத்து விடுவார். அந்த வகையில் அஜித், விஜய் இருவருக்கும் தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
வேறு நடிகர்கள் யாராவது இவர்கள் இருவரை பற்றி புகழ்ந்து பேசினால் அன்றைய தினத்தில் ட்விட்டரில் அந்த ரசிகர்கள் ரெண்டிங் ஆக்கி விடுவார்கள்.
இந்த நிலையில் தான் தற்போது, வாரிசு படத் தயாரிப்பாளர் தில் ராஜு கூறியது தற்போது சினிமா துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் விஜய்யை விட அஜித் பெரிய ஸ்டார் இல்லை என்பது தான், மேலும் துணிவு பட விநியோகஸ்தர் உதயநிதி ஸ்டாலினிடம் சென்று வாரிசு திரைப்படத்திற்குக்கு தான் அதிக தியேட்டர் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்க போவதாகவும் தெரிவித்தார்.
இதனால் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியதோடு மனதில் அணையாத நெருப்பாக எரிந்து கொண்டிருப்பதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மேலும், வாரிசு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளையும் படக்குழு பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஆனால் துணிவு படத்தின் ப்ரோமோஷனில் அஜித் பங்கேற்கப்போவதில்லை என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. நல்ல படத்திற்கு அதுவே தான் விளம்பரம் என அஜித் சமீபத்தில் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா ஒரு ட்விட் பதிவிட்டு இருக்கிறார். அதில் அஜித் பைக் ரைடு சென்ற ஒரு போட்டோவை போட்டு “No guts no glory !!!” என பதிவிட்டு இருக்கிறார்.
தில் ராஜுவுக்கு பதிலடியாக தான் இப்படி ஒரு பதிவை அவர் போட்டாரா? என நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.
No guts no glory !!! pic.twitter.com/MI2cxgVwbp
— Suresh Chandra (@SureshChandraa) December 16, 2022