AK 62 இயக்கத்தில் தடுமாறும் விக்னேஷ் சிவன் – நடப்பது என்ன ??
துணிவு படத்தின் மூலம் மிக பெரிய வெற்றி பெற்ற அஜித் குமார் அடுத்ததாக தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக இருந்து இயக்குனராக மாறிய விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அடுத்த படம் நடிக்க போகிறார் என்று அதிகார பூர்வமாக தகவல்கள் வெளியாகின.

விக்னேஷ் சிவன் இதற்க்கு முன்னதாக – போடா போடி , நானும் ரௌடிதான், கத்துவக்குல ரெண்டுகாதல் – போன்ற படங்களை இயக்கியுள்ளார் – இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நயன்தாராவையும் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இவர் இயக்க போகும் முதல் படம் AK – 62 – அஜித் நடித்த துணிவு படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெறவே. அடுத்த படத்தை இயக்க போகும் விக்னேஷ் சிவன் மேல் எதிர்பார்ப்புகள் அதிகமாயின.

190 கோடி பண செலவில் உருவாக போகும் இந்த படத்திற்க்கு – படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் – இன்னும் படப்பிடிப்பு தொடங்காத நிலையில் தான் உள்ளது. இன்னும் AK 62 படப்பிடிப்பு தொடங்காததை குறித்து பல தகவல்கள் கோடம்பாக்கத்தில் இருந்து வருகின்றது.

கதையில் அஜித் பல மாற்றங்கள் கூறுவதாகவும் – ஒரு வரத்திர்ற்குமுன்பாதாக கூட கதையை படித்துவிட்டு – பல பகுதிகளை மற்ற சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகின்றன – இதனால் தான் மிக பெரிய நட்சத்திரமாக இருக்கும் அஜித் ஐ வைத்து படம் இயக்க தடுமாறுகிறாரா விக்னேஷ் சிவன் என்ற பல கேள்விகளும் எழும்பியுள்ளன