10 சாதனைகள் படைத்த ‘பதான்’ திரைப்படம் – ஷாருக்கானுக்கு குவியும் பாராட்டுக்கள்

Advertisements

நீண்ட நாள் கழித்து ஷாருக்கானின் ‘பதான்’ படம் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வரும் வேளையில், பாலிவுட்டில் இந்த படம் பல சாதனைகளைப் படைத்துள்ளது. மேலும் பாய்காட் ட்ரெண்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த படம் அமைந்துள்ளதற்கு, படக்குழுவினருக்கு பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதன்படி,
1. இந்தியாவில் இருந்து வெளியான இந்தி திரைப்படங்களில் உலக அளவில் அதிகளவு திரைகளில் வெளியான திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
ஷாருக்கான் ‘ரா” உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அவருடன் தீபிகா படுகோனே முன்னாள் ஐஎஸ்ஐ ஏஜெண்டாக நடித்துள்ளார். ஜான் ஆப்ரஹாம் வில்லனாகவும், டிம்பிள் கபாடியா, அஷிதோஷ் ராணா, ஷாஜி சௌத்ரி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சல்மான் கான் கேமியோ ரோலில் வந்துள்ளார். உலகம் முழுவதும் நேற்று வெளியான இந்தப் படம் ஹிந்தியில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.

2. இதுவரை வெளியான இந்தி மொழி படங்களில், அதிக வசூலை ஒரே நாளில் எட்டிய படம் என்ற பெருமையை கொண்டுள்ளது. (106 கோடி )

Advertisements

இது போன்ற பல சாதனைகளை ‘பதான்’ திரைப்படம் படைத்துள்ளது.

இதற்கியிடையில், ‘பதான்’ பட குழுவினருக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் பதிவு செய்துள்ள ட்விட்டில், ஷாருக்கான் மீண்டும் வந்துள்ளார். தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரஹாம் உள்ளிட்ட படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். #பேஷாரம் சங்” என்று சர்ச்சை பாடல் ஹேஸ்டேக்குடன் பதிவிட்டுள்ளார்.

Advertisements

Leave a Comment