மீன் என்று சொன்னாலே நம் மனதுக்கு வருவது மெல்லிய புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை மற்றும் இதயம், மனம், உடலுக்கு நன்மை பயப்பவை என்பதுதான். ஆனால், ஒருபுறம் நன்மை என்றாலும் அனைத்து மீன்களும் நன்மை தருகிறது என்றால் அது கேள்விக்குறிதான்.
ஏனெனில் குறிப்பிட்ட சில மீன்கள் ரத்த அழுத்தத்தை அதிகரித்து. ஹைபர் டென்ஷனுக்கு வழிவகுக்கும் என்கிறது ஆய்வுகளின் அதிர்ச்சி தகவல் கானாங்கெளுத்தி மற்றும் சால்மன் போன்றவை இதயத்திற்கு நன்மை கொடுத்தாலும் இவற்றை சரியாக சமைக்காவிட்டால் ரத்த அழுத்தத்திற்ற்கு வழிவகுக்கும்.
மீன் ஆரோக்யமற்ற உணவின் லிஸ்ட்டில் இடம்பெறாது. அதேசமயம், சால்மன், மத்தி மற்றும் கானாங்கெளுத்தி போன்றவை மூளை மற்றும் இதயத்தை பாதுகாக்கும் உணவுகளாகும்…