நன்றாக பல்லை துலக்கினால் வாய் துர்நாற்றம் போய்விடும் என்று சிலர் எண்ணுகின்றனர். ஆனால் சுத்தமாக பல் துலக்கினாலும் வாய்துர்நாற்றம் வரும் காரணம் என்னவென்றால், வாய் துர்நாற்றம் என்பது வாயோடு மட்டுமே தொடர்புடையது அல்ல.
வாய் மட்டுமல்ல, வயிற்றில் பிரச்சனைகள் இருந்தாலும் வாய்நாற்றம் உண்டாகும். உணவுப்பழக்கம் தவிர அல்கஹால் மற்றும் புகைப்பழக்கத்தால் மக்கள் தொகையில் பாதிப்பேருக்கு இந்த பிரச்சனை இருக்கிறது. என ஒரு ஆய்வில் தெரிகிறது.
மேலும் உடலில் உள்ள சல்பர் அளவை சோதிக்க ‘sniff test’ எடுக்க வேண்டும். மேலும் வாய் துர்நாற்றம் வந்தால் பல்சொத்தை அல்லது ஈறுகளில் பிரச்னை இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். அதைபோல் தினமும் நாக்கை சுத்தம் செய்வது அவசியம்
வாய் துர்நாற்றத்தை குறைக்க சில வழிகள்…
வாய் துர்நாற்றம் போக சுவிங்கம் அல்லது இதற்கென்று விற்கும் பிரத்யேக மிட்டாய்களை வாங்கி பயன்படுத்தலாம்.
மது மற்றும் புகைபிடித்தல் பழக்கத்தை கைவிட்டால் சிறந்தது.
நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.