இரவு சாப்பிட்ட பின் சிறிது நேரம் நடப்பது எவ்வளவு நன்மை தெரியுமா?

நடப்பது எப்போதுமே உடல்நலத்திற்கு நன்மை தரக்கூடியது. காலையோ, மாலையோ அல்லது இரவோ எப்போது சிறிது நடந்தாலும் அது உடல் மற்றும் மனநலத்தை மேன்படுத்தும். இரவு உணர்விற்கு பிறகு 2 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்வது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
சமீபத்தில் ஸ்போர்ட்ஸ் மெடிசின் இதழில் வெளியான மெட்டா பகுப்பாய்வில் இதுகுறித்து விளக்கப்பட்டுள்ளது. அமர்ந்தே இருப்பவர்களுக்கும் நிற்பவர்களுக்கும் இதய ஆரோக்யம் மற்றும் ரத்த சர்க்கரை அளவு ஆகியவை கணக்கிடப்பட்டு ஒப்படிடப்பட்டது. குறிப்பாக இரவில் சிறிது நேரம் நடப்பவர்களுக்கு இதய ஆரோக்யம் மற்றும் நீரிழிவு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருந்தது கண்டறியப்பட்டது.
நடப்பது மனா ஆரோக்யத்தை மேன்படுத்தும் சிறந்த வழிகளில் ஒன்று. இது மன அழுத்தம், மன பதற்றம் மற்றும் மன சோர்விலிருந்து விடுபட உதவும். ஏனெனில் நடப்பது மன அழுத்தத்தை உருவாக்கும் அட்ரலின் மற்றும் கார்டிசோல் போன்ற ஹார்மோன்களின் சுரப்பை குறைக்கும்.
தினசரி சீரான உடல் இயக்கம் கொடுப்பவர்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவானது கட்டுக்குள் இருக்கும்.
Your article gave me a lot of inspiration, I hope you can explain your point of view in more detail, because I have some doubts, thank you.