ஜனவரி 25ம் தேதி ஷாருக்கானின் பதான் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் ஒரு பாடலில் நடிகை தீபிகா காவி நிற உடை அணிந்ததால் பெரிய சர்ச்சைக்குள்ளானது, இதனால் வட மாநிலம் சில இடங்களில் போராட்டம் எல்லாம் நடைபெற்றது…
எனவே படம் ரிலீஸ் ஆனால் எப்படி வசூல் இருக்கும், கூட்டம் இருக்குமா என ரசிகர்களாலும் எதிர்பார்ப்பில் இருந்தனர்…

ஆனால் எல்லோரின் கவலையையும் படம் நீக்கிவிட்டது. அதாவது யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் படம் நாளுக்கு நாள் அதிரடி வசூல் வேட்டை செய்து வருகிறது. தற்போது வரை படம் 6 நாட்களில் ரூ. 600 கோடி வரை உலகம் முழுவதும் வசூலித்துள்ளது என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
