லோகேஷ் கனகராஜ் இப்படி செய்திருக்க கூடாது…விஜய் ரசிகர்களுக்கு ஓர் ஷாக்…

Advertisements

விஜய் நடிப்பில் அடுத்ததாக தயாராகி வரும் திரைப்படம் தளபதி 67. லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணி இரண்டாவது முறையாக இணைவதால் இப்படம் அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது…

வாரிசு படத்தின் ரிலீஸுக்கு பின் தளபதி 67ன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று தளபதி 67 படத்தின் அறிவிப்பை 7ஸ்க்ரீன் நிறுவனம் அறிவித்தது…

மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட மாஸ் புகைப்படத்தையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தை பற்றிய ஆர்வம் அதிகரித்தது..

Advertisements

தளபதி 67 படம் லோகேஷ் கனகராஜின் LCUவில் வரப்போகிறது என்று தான் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ரசிகர்க்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக கைதி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில், தளபதி 67 படத்திற்காக லோகேஷ் கனகராஜுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டது, தனியாக உருவாகும் யூனிவேர்ஸ் என்று அறிவித்துள்ளார். இதன்முலம் தளபதி 67 படம் லோகேஷ் கனகராஜின் LCUவில் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது..

இது விஜய் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சியளிக்கும் தகவல் தான். ஆனால், விஜய்யை வைத்து புதிய யூனிவேர்ஸை கூட லோகேஷ் கனகராஜ் உருவாக்க திட்டமிட்டு இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் விரைவில் விளக்கம் கொடுப்பார் என்று ரசிகர்கள் காத்துருக்கின்றனர்..

Advertisements

Leave a Comment