ரஜினியின் அந்த சென்டிமென்ட்.. “தளபதி 67” படத்துக்காக கையில் எடுத்த விஜய்..!!

Advertisements

பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் வாரிசு திரைப்படத்தினை திரையரங்குகளில் பட்டாசு வெடித்து பட்டையக் கிளப்ப காத்துக் கொண்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். வாரிசுக்கு போட்டியாக அஜித்தின் துணிவு படமும் வெளியாக இருப்பதால் சினிமா திரையுலகமே பரபரத்து கொண்டிருக்கிறது.

படக்குழுவும் வாரிசு படத்தின் வெளியீட்டு பணிகளில் படு பிசியாக இருந்து வந்தாலும், விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 67’ குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகளும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தி வருகிறது.

அதன்படி பார்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உருவாக்க இருக்கும் படத்தில் நடிகர் விஜய் மாஸான கேங்ஸ்டராக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

சென்னையில் உள்ள புகழ்பெற்ற ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்ற இப்படத்திற்கான பூஜையில், விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்பட தளபதி 67-ல் பணியாற்றும் குழுவினரும் கலந்து கொண்டனர். ஆனால் இந்த பூஜை குறித்த புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கு காரணம் படக்குழுவினர் யாரும் செல்போன் கொண்டுவர தடைவிதிக்கப்பட்டது தானாம். அந்த அளவுக்கு இப்படத்தின் பூஜை குறித்த படங்கள் வெளியாகிவிடக் கூடாது என்பதில் படக்குழு உறுதியாக இருந்தது.

Advertisements

இதற்கு முக்கிய காரணமாக பாரக்கப்படுவது, பூஜை செய்த புகைப்படங்கள் வெளியானால்அது வாரிசு படத்தின் புரமோஷனை பாதிக்கும் என்பதால், அப்படம் ரிலீசான பின்னர் இதுகுறித்த அறிவிப்பை ஒரு டீசராக வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.

இந்த டீசர் விக்ரம் படத்திற்காக எடுக்கப்பட்ட டீசரை போல் இருக்கும் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இதற்கான ஷூட்டிங் நாளை முதல் நான்கு நாட்களுக்கு சென்னையில் நடைபெற உள்ளதாம். அதுமட்டுமின்றி போட்டோஷூட் நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் பூஜையில் நடந்த இன்னொரு ஸ்பெஷலான விஷயம் என்னவென்றால், ஏவிஎம்-ல் உள்ள பிள்ளையார் கோவிலில் தான் இப்படத்திற்கு பூஜை போடப்பட்டது.

நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு அங்கு பூஜை போடப்படுவது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் தான் நடிக்கும் எந்த படமாக இருந்தாலும், இந்த கோவில் தான் பூஜை போடுவாராம்.

இந்த செண்டிமெண்டை பல ஆண்டுகளாக ரஜினி பின்பற்றி வரும் நிலையில், தற்போது விஜய்யும் அதனை பாலோ செய்ய தொடங்கி உள்ளார் போல தெரிகிறது.

 

Advertisements

Leave a Comment