தளபதி ரசிகர்களின் கட்டுப்பாட்டில் ட்விட்டர்.. வாரிசு 2ம் சிங்கிள் அப்டேட் வெளியானது..!!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கம் திரைப்படத்தினை தில்ராஜு தயாரித்திருக்கிறார். ஆக்ஷன். எமோஷனல் என கலவையாக உருவாகி இருக்கும் திரைப்படத்தினை திரையில் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இப்படி பட்ட சூழ்நிலையில் இந்த படத்திற்கு பல சிக்கல்கள் தொடர்ந்து எழுந்து வருவதால் அவரது ரசிகர்களை கவலையடைச் செய்து வருகிறது.
சமீபத்தில் தெலுங்கில் வாரிசு படத்தினை வெளியிட முடியாது என தெலுங்கு திரையுலகமே கூட்டுச் சேர்ந்து அறிவித்ததை அடுத்து, ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுக்க, ஒரு வழியாக பிரச்சனை முடிந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, அந்த திரைப்படத்தில் இருந்து, ரஞ்சிதமே பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய நிலையில், அந்த பாடல், வேறு பாடலின் சாயலில் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து இணையத்தில் பரப்பியது விஜய் ரசிகர்களை கவலையடைச் செய்தது.
ஆனால் படம் பொங்கலுக்கு வெளியாவதை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று புதிய போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டது.
இதனால் பொங்கலுக்கு வாரிசு vs துணிவு என்பது உறுதியாகியிருக்கிறது. நீண்ட நாள்கள் கழித்து விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் தியேட்டர்கள் திருவிழாக்கோலம் காண தயாராகியிருக்கின்றன.
இந்நிலையில், ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் வாரிசு படத்தின் இரண்டாம் சிங்கிள் அப்டேட் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
’தீ தளபதி’ என்ற இந்த பாடல் டிசம்பர் 4ம் தேதி மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் தற்போது விஜய் ரசிகர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக ரசிகர் ஒருவர் ட்விட் செய்திருக்கிறார்.
Social media under Thalapathy fans control 👑😎💪🏻 #TheeThalapathy #VarisuSecondSingle #VarisuUpdate #VarisuPongal @actorvijay pic.twitter.com/pg3q4erR7i
— PrayushKhanna🤴 (@prayushkhanna12) December 2, 2022