தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைக்கு வருகிறது. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தை எச். வினோத் இயக்கி வருகிறார்.
தமன் இசையில் உருவாகியுள்ள துணிவு படத்தின் முதல் பாடலை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். வருகிற 2023 பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது துவங்கியுள்ளது.
இதனிடையே, துணிவு படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துள்ளது. இதனால், தாடி மற்றும் மீசையை ஷேவ் செய்து வெறித்தனமான கிளாஸ் லுக்கில் ஹாலிவுட் ஹீரோ போல் மாறியுள்ளார் அஜித். இதனையடுத்து பலரும் எதிர்பாராத புள்ளிங்கோ கட்டிங் செய்து புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியது.
இதனிடையே நடிகர் அஜித்தின் திரைவாழ்க்கையில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது தான் வேதாளம். இந்த திரைப்படம் சுமார் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்த இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார்.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அஜித் கிரிக்கெட் விளையாடும் அன்ஸீன் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அஜித் கிரிக்கெட் விளையாடும் இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ..
#Ajithkumar|#ThunivuPongal|#NoGutsNoGlory
Thala Morning Vibes 💥💥💥 pic.twitter.com/rCLF1koIk3— @செல்வப்பாண்டியன்…….. (@Selva59350611) December 1, 2022