இயக்குனர் அட்லீ இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து, இன்று இந்திய அளவில் பிரபலமான இயக்குனர்களின் ஒருவராக மாறி இருக்கிறார்.
முதல் முதலில் அட்லி இயக்கிய ராஜா ராணி திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்ததை அடுத்து, நடிகர் விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்றார் அட்லீ. தொடர்ந்து அட்லி இயக்கத்தில் 3 படங்களில் விஜய் நடித்தார்.
இதனிடையே, இயக்குனர் அட்லி, நடிகை பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி 8 ஆண்டுகளுக்கு பின் தங்களுடைய முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாக மிகழ்ச்சியான செய்தியை சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தனர்.
இதனையடு;து, நேற்று பிரம்மாண்டமான முறையில் பிரியா அட்லீக்கு வளைகாப்பு நடைபெற்றது. இந்த விழாவிற்கு விஜய்யும் வந்திருந்தார். அழகிய ஓவியம் ஒன்றை இந்த ஜோடிக்கு பரிசாகவும் தந்தார்.
இந்த ஓவிய பரிசுதான் நிறுத்தாமல், தளபதி 68 படத்தை அட்லீக்கு கொடுத்துள்ளாராம்.
சன் பிக்சர்ஸ் – விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகவிருக்கும் இப்படத்தின் பட்ஜெட் சுமார் ரூ. 400 கோடி என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கான அக்ரீமெண்ட் சமீபத்தில் போடப்பட்டதாகவும் பிரபல பத்திரிகையாளர் ஒரு கூறியுள்ளார்.