இளைய தளபதி விஜய் நடிப்பில் கடையில் வெளியான திரைப்படம் பீஸ்ட், இந்த திரைப்படத்தை காண இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்து.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருந்த இப்படத்திற்காக, பல வருடங்களுக்கு பிறகு பிரேமோஷனுக்காக விஜய் பேட்டி கூட கொடுத்திருந்தார்.
நெல்சன் எடுத்து இருந்த இப்படம் வெளியாகி, மக்கள் மத்தியில் போதுமான வர கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்தில் அவ்வளவாக சுவாரஸ்யமான எந்த காட்சிகளும் இடம்பெறவில்லை என்பது ரசிகர்களின் கவலையாக இருந்து.
படத்திற்காக பெரிய அளவில் புரொமோஷன் செய்தும் படம் சரியான பாக்ஸ் ஆபிஸல் கல்லா கட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தளபதி விஜய் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தை தொடர்ந்து யாருடைய படத்தில் நடிக்கப்போகிறார் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
ஆமாம்., வேறுயாரு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் தனது 67வது படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய்.
இப்பட பூஜை கூட அண்மையில் போடப்பட்டதாக தெரிவித்தனர், ஆனால் புகைப்படம் எதுவும் வெளியாகவில்லை.
இப்படத்தில் நடிகர் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், அந்த கதாபாத்திரத்திற்காக மட்டுமே அர்ஜுன் ரூ. 4.5 கோடி வரை சம்பளம் வாங்க இருப்பதாக சில தகவல்கள் வலம் வருகின்றன.
விஜய்க்கு ரூ125 கோடிகள் சம்பளமாக பேசப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.ஆனால் இந்த சம்பள விவரம் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.