திரைப்பட இயக்குனர் அகத்தியனின் மகள் விஜயலக்ஷ்மி. இவர் 2007ஆம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த சென்னை 60028 என்ற படத்தில் மூலம் நடிகையாக சினிமா உலகிற்கு அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து, அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், சரோஜா, கற்றது களவு போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். இருப்பினும், அவருக்கு போதிய மார்க்கெட் கிடைக்கவில்லை.