கொடைக்கானலில் தளபதி 67 – படப்பிடிப்பு தொடக்கம்

கொடைக்கானலில் தளபதி 67 – படப்பிடிப்பு தொடக்கம்
தளபதி நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.. வம்சி இயக்கத்தில் உருவான இந்த படம் கூட்டு குடும்ப கதையை மையமாக கொண்டு கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது

திரையரங்குகளை தொடர்ந்து வாரிசு திரைப்படம் OTT யிலும் FEB – 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.. வாரிசு படத்தினால் அதிருப்தி அடைந்த தளபதி விஜய் ரசிகர்கள் – லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகும் தளபதி 67 படத்தின்மேல் எதிர்ப்பார்புடன் உள்ளனர்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செல்லும் இடமெல்லாம் தளபதி ரசிகர்கள் தளபதி 67 அப்டேட் கேக்க தொடங்கினர் – ஆனால் 10 நாட்களில் அப்டேட் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார் .. இந்த நிலையில் இப்பொது தளபதி 67 படத்திலிருந்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது
தளபதி 67 படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்கியுள்ளது – படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இங்கு நடந்து வருகிறது. ஆனல் இந்த படப்பிடிப்பில் தளபதி விஜய் கலந்துகொள்ளவில்லை என தெரிகிறது. லோகேஷ் கனகராஜ் சொன்னது போலவே இன்னும் 10 நாட்களில் தளபதி 67 படத்தின் அப்டேட் கிடைக்கும் என தெரிகிறது