வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் வசூல் இவ்வளவு தானா.?அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

0

உலக முழுவதும் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை மீம்ஸ்கள் மூலம் சாதராண மக்களுக்கு புரிய வைத்து வருகின்றனர் இந்த மீம்ஸ் கிரியேட்டர்கள்.

குறிப்பாக தமிழ் மொழியில் இடம் பெறும் மீம்ஸ்கள் பெரும்பாலும் வைகை புயல் வடிவேலுவை வைத்து தான் இருக்கும். அந்த அளவிற்கு அவர் நடித்த படங்களில் இருக்கும் முகப்பாவனைகள் மூலம் தற்போது நடக்கும் நிகழ்வுகளை அப்படியே காமெடி கலந்து காட்ட கூடிய வகையில் அமைந்து விடும்.

மேலும், இவருடைய படத்தில் பேசிய அனைத்து காமெடி வசனங்களும் தற்போது வரை மக்கள் மனதில் நீங்காமல் இருந்து வருகிறது.

இதனிடையே, வடிவேலு கதாநாயகனாக நடித்த ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி வெளியானது. இப்படத்தை சுராஜ் இயக்கியுள்ளார்.

மேலும் படத்தில் குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கி, ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரித்து இருந்தது.

ஆனால் இப்படம் வெளியான தினத்தில் இருந்து போதுமான வரவேற்புக்கள் கிடைக்கவில்லை. காரணம், படம் முழுவதும் நாயை சுற்றியே இருந்ததால், ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த காமெடிகள் அமையவில்லை என்பதே நிதசர்னமான உண்மை.

இருந்தாலும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் தற்போது வரை தமிழகத்தில் பல திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில், இப்படம் உலக அளவில் ரூ 7.70 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகிவுள்ளது.

இருப்பினும் தயாரிப்பு நிறுவனமான லைகா இதுவரை வசூல் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *