“வாரிசு படத்தின் இசை வெளியிட்டு தேதி”. இணையத்தில் தீயாய் பரவும் செய்தி..!!

Advertisements

அஜித்தின் துணிவும் – விஜயின் வாரிசு படமும் ஒரே நாளில் வெளியாகும் என்ற செய்தி வந்ததிலிருந்து சமூக வலைத்தளங்களில் எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு நடுவே போட்டியும் தொடங்கின.

தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைக்க, ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார்.

இதனிடையே, வாரிசு படத்தின் கதை குறித்த தகவல்கள் இணைத்தில் வைரலானது. அதில்’கவலையில்லாமல் வாழ்ந்து வரும் இளைஞர் தான் தளபதி விஜய். ஆனால், திடீரென விஜய்யின் வாழ்க்கையில் அனைத்தும் மாற, அவருடைய வளர்ப்பு தந்தை மரணமடைகிறார்.

Advertisements

இதனால் அவருடைய கோடிக்கணக்கான தொழிலை ஒரு மகனாக எடுத்து நடத்தி அதில் வரும் எதிர்ப்புகளை எப்படி விஜய் எதிர்கொள்கிறார், என்பது தான் வாரிசு படத்தின் கதை என வைரலானது.

இதனிடையே, வாரிசு படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்காக ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் படத்தின் இசை வெளியிட்டு விழாவினை வரும் 24 ஆம் தேதி மிகவும் பிரமாண்டாக நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Advertisements

Leave a Comment