தேவர்மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் நீலிமா ராணி . ‘ஒரு பெண்ணின் கதை’ என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கிய நீலிமாவுக்கு, அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் வரத் தொடங்கின.
‘மெட்டி ஒலி’, ‘கோலங்கள்’ போன்ற சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனங்களில் ஆழமாக பதிந்தார். இது ஒரு புறம் இருக்க, திரைப்படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தினார்.
அந்த வகையில், கார்த்தி நடிப்பில் வெளியான ‘நான் மகான் அல்ல’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில், ‘நான் மகான் அல்ல’ படத்தில் சிறந்த சப்போர்ட்டிங் கதாபாத்திரத்திற்காக, எடிசன் விருதும் வாங்கி இருக்கிறார் நீலிமா.
அரண்மகனை கிளி என்ற சீரியலில், துர்கா என்ற கதாபாத்திரத்தில் தனது வில்லத்தனத்தை அழகாக காட்டி இளசுகளின் மனங்களில் பதிந்தார்.
ஆனால், பாதியிலேயே அந்த சீரியலிருந்து விலகினார். அதோடு சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, அதை நிர்வகித்தும் வருகிறார்.
அதோடு அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் மனதிலும் ஆழமாக பதிந்திருக்கிறார் நீலிமா ராணி. அந்த வகையில், காருக்குள்ள செம கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசித்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.