அரசியல் வாரிசுக்கு பயந்து பின்வாங்கும் சினிமா வாரிசு..? அடுத்த சிக்கல் .. பரபரப்பு தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி..!!

Advertisements

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கம் திரைப்படத்தினை தில்ராஜு தயாரித்திருக்கிறார். ஆக்‌ஷன். எமோஷனல் என கலவையாக உருவாகி இருக்கும் திரைப்படத்தினை திரையில் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இப்படி பட்ட சூழ்நிலையில் இந்த படத்திற்கு பல சிக்கல்கள் தொடர்ந்து எழுந்து வருவதால் அவரது ரசிகர்களை கவலையடைச் செய்து வருகிறது.

சமீபத்தில் தெலுங்கில் வாரிசு படத்தினை வெளியிட முடியாது என தெலுங்கு திரையுலகமே கூட்டுச் சேர்ந்து அறிவித்ததை அடுத்து, ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுக்க, ஒரு வழியாக பிரச்சனை முடிந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, அந்த திரைப்படத்தில் இருந்து, ரஞ்சிதமே பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய நிலையில், அந்த பாடல், வேறு பாடலின் சாயலில் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து இணையத்தில் பரப்பியது விஜய் ரசிகர்களை கவலையடைச் செய்தது.

ஆனால் படம் பொங்கலுக்கு வெளியாவதை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று புதிய போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டது.

இதனால் பொங்கலுக்கு வாரிசு vs துணிவு என்பது உறுதியாகியிருக்கிறது. நீண்ட நாள்கள் கழித்து விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் தியேட்டர்கள் திருவிழாக்கோலம் காண தயாராகியிருக்கின்றன.

இந்த நிலையில் தான், தற்போது, ‘வாரிசு’ படம் வெளிட திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகவும், இதனால், அப்படத்தை பொங்கலுக்கு பின் வெளியிட ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisements

இதனிடையே, அஜித் நடிக்கும் ‘துணிவு’ திரைப்படம் பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது. இரண்டு படங்களின் வியாபாரமும் தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது.

தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதியின் நிறுவனம் சார்பில் ‘துணிவு’ படம் தமிழகம் முழுதும் 800 தியேட்டர்களில் வெளியிடப்பட உள்ளதாக தெரிகிறது.

இதன் காரணமா மீதமுள்ள திரையரங்குகளில் மட்டுமே ‘வாரிசு’ படத்தை வெளியிட வேண்டிய நிலையக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரிய நடிகர்களின் படங்கள் வெளியான, முதல் நான்கு நாள் தான் படங்களுக்கு வசூல் பெரிய அளவில் இருக்கும் என கருதப்படுகிறது. எனவே பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையில் அதிக தியேட்டர்களில் ஓடும் ‘துணிவு’ படத்தின் வசூல் அதிகமாக இருக்கும் என்பதால் குறைந்த எண்ணிக்கையில் வெளியாகும் ‘வாரிசு’ படத்தின் வசூல் குறையும் வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது.

தமிழகத்தில் இரண்டு படங்களுக்குமே சம அளவில் தான் திரையரங்குகளில் வெளியிடப்படும் என ஒரு பேட்டியில் உதயநிதியே கூறி இருந்தாலும் அதை விஜய் ரசிகர்கள் நம்பத் தயாராக இல்லை என கூறப்படுகிறது.


இதனால் விஜய் படத்திற்கு வசூல் ரீதியாக எதிர்மறை விமர்சனம் ஏற்படும் என்பதால் பொங்கல் விடுமுறைக்கு பின் படத்தை வெளியிடுவது குறித்து விஜய் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.

மேலும், ‘அஜித் படத்தையும், விஜய் படத்தையும் 50:5௦ சதவீதம் அடிப்படையில் தியேட்டர்களில் வெளியிட உதயநிதி நிறுவனம் முன்வர வேண்டும். ‘இரண்டு நடிகர்களின் படங்களும் சமமான எண்ணிக்கையில் தியேட்டர்களில் ஓடினால்தான் யார் படத்திற்கு வசூல் அதிகம்இ லாபம் அதிகம் என்பது தெரியவரும் என்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisements

Leave a Comment