விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் கதை இதுவா.? இணையத்தில் கசிந்த தகவல்.கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்.?

Advertisements

தளபதி விஜய் நடிக்கும் வாரிசு படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொன்டே போகிறது. தளபதி வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் Youtube – ஐ ஆள தொடங்கியது.

அஜித்தின் துணிவும் – விஜயின் வாரிசு படமும் ஒரே நாளில் வெளியாகும் என்ற செய்தி வந்ததிலிருந்து சமூக வலைத்தளங்களில் எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு நடுவே போட்டியும் தொடங்கின.

Thalapathy' Vijay-Starrer 'Varisu' To Release On Sankranti 2023

இந்த பாடல் Youtube -இல் அதிக பார்வையாளர்களை பெற்ற பாடலாக மாறி சாதனை படைத்தது  வருகிறது.

தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைக்க, ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார்.

Advertisements

இதை தொடர்ந்து வாரிசு படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில், வாரிசு படத்தின் கதை இதுதான் என்று கூறி தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் கதைப்படி ‘கவலையில்லாமல் வாழ்ந்து வரும் இளைஞர் தான் தளபதி விஜய். ஆனால், திடீரென விஜய்யின் வாழ்க்கையில் அனைத்தும் மாற, அவருடைய வளர்ப்பு தந்தை மரணமடைகிறார்.

இதனால் அவருடைய கோடிக்கணக்கான தொழிலை ஒரு மகனாக எடுத்து நடத்தி அதில் வரும் எதிர்ப்புகளை எப்படி விஜய் எதிர்கொள்கிறார்’ என்பது தான் வாரிசு படத்தின் கதை என்று தகவல் வெளியாகியுள்ளது. இவ்வளவு தான் கதை அப்போ படம் ஓடாதா என அஜித் ரசிகர்கள் இணையத்தில் கிண்டல் அடித்து வருகின்றனர்.

Advertisements

Leave a Comment