தொழிலதிபரின் நிஜ கதையை தழுவி ‘விஜயானந்த்’.

Advertisements

உலகில் வெற்றிக்கு பல விதிகள் இருக்கும் ஆனால் வெற்றிபெற்றவன் கதை வேறு மாதிரி இருக்கும். வெற்றி பெற்றவனின் வாழ்க்கை தான் வெற்றிக்கான வழி

கர்நாடகா மாநிலத்தின் ஒரு கிராமத்தில் ஒரு சிறு டிரக்கை வைத்து கொண்டு பிஸினஸ் ஆரம்பித்து 4300 வாகனங்களுக்கு சொந்தக்காரராக மாறிய ஒரு மிகப்பெரும் பிஸினஸ்மேனின் அசாதாரணமான வாழ்க்கை தான் “விஜயானந்த்” திரைப்படம்.

இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தில் கதையின் நாயகனான விஜய் சங்கேஸ்வர் கதாபாத்திரத்தில் நடிகர் நிஹால் நடித்திருக்கிறார்.

Advertisements

இவருடன் ஆனந்த் நாக், ரவிச்சந்திரன், பாரத் பொப்பண்ணா, பிரகாஷ் பெலவாடி, ஸ்ரீ பிரகலாத், வினயா பிரசாத், அர்ச்சனா, அனிஷ் குருவில்லா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். சுய சரிதையை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தை வி ஆர் எல் ஃபிலிம்ஸ் நிறுவனம், பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையா கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

Advertisements

Leave a Comment