சமீபத்தில் கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாக விருக்கும் 54வது படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க இருந்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தான் உதயநிதிஸ்டாலின் கமலஹாசன் படத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து இருக்கிறார். இதற்கு காரணம் தற்போது தமிழக அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்று இருக்கிறார்.
இதனால், சினிமாவில் அதிக நேரம் செலவிடமுடியாது எனக் கூறி அதிலிருந்து வெளியேறி இருக்கிறார்.
இந்நிலையில் தான், இப்படத்தில் உதயநிதிக்கு பதிலாக யாரை நடிக்க வைக்கலாம் என கமல் தற்போது முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆம், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை தான் ஹீரோவாக நடிக்க வைக்க போகிறாராம் கமல்.
விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.