விஜய்க்கு வில்லன் இவரா..? அஜித்தை மிரட்டிய மாஸ் வில்லன் இப்போது “தளபதி 67”-ல்.?

Advertisements

இளைய தளபதி விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்டத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து இருக்கிறார்.

இதனிடையே, வருகிற 2023 பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு இரு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாவதால், சினிமா வட்டாராத்தில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகவுள்ள ஐந்தாவது திரைப்படம் தான் தளபதி 67. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் இயக்கத்தில் விஜய் இப்படத்தில் நடிக்கிறார்.

பிரமாண்ட பட்ஜெட்டில் துவங்கும் இப்படத்தின் பூஜை நேற்று போடப்பட்டது. பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

இப்படத்தில் வில்லனாக விஷால் நடிக்க போகிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. விஷால் தான் இப்படத்தில் வில்லன் என்று ஏறக்குறைய உறுதியானது.

Advertisements

ஆனால், விஷாலுக்கு முன்பே இந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அர்ஜுனிடம் அணுகினாராம் லோகேஷ். அப்போது அர்ஜுன் இல்லை என்ற பிறகு தான் விஷாலிடம் சென்று வில்லனாக நடிக்க கேட்டதாக ஒரு தகவல் வெளிவந்தது.

இந்நிலையில், நேற்று போடப்பட்ட தளபதி 67 பூஜை விழாவில் அர்ஜுன் கலந்துகொண்டுள்ளார். இதன் முலம் தளபதி 67 படத்தில் அர்ஜுன் நடிப்பது உறுதியாகியுள்ளது என தெரிவிக்கின்றனர்.

இதனால் கண்டிப்பாக இப்படத்தில் விஷால் நடிக்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. மேலும் இந்த பூஜை விழாவில் திரிஷா, நடிகை பிரியா ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இப்படத்தின் பூஜை வீடியோ அல்லது புகைப்படங்கள் வெளிவரும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Advertisements

Leave a Comment