இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் போன்ற பன்முகத்திறமை கலைஞனாக இருப்பவர் விக்னேஷ் சிவன்.போடா போடி படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார் விக்கி, அடுத்ததாக நானும் ரெளடி தான் என்கிற கமர்ஷியல் படத்தை இயக்கி வெற்றியும் கண்டார் . சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார்.
காத்துவாக்குல ரெண்டு காதல் என்கிற ரொமாண்டிக் திரைப்படத்தையும் இயக்கினார். அவரின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும், செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்த இப்படம் கடந்த ஆண்டு ரிலீஸாகி வெற்றியடைந்தது.
இதையடுத்து விக்கிக்கு கிடைத்த வாய்ப்பு தான் அஜித்தின் ஏகே 62. லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் கடந்தாண்டு மார்ச் மாதமே அறிவிப்பு வெளியானது. அஜித்துடன் பணியாற்ற போகிறோம் என்கிற பெரும் கனவோடு இருந்த விக்னேஷ் சிவனுக்கு அது நிறைவேறாமல் போனது. கடந்த சில வாரத்துக்கு முன்னர் ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு, அவருக்கு பதில் மகிழ் திருமேனி அப்படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
விக்னேஷ் சிவன் கதையில் அஜித்துக்கும், லைகா நிறுவனத்துக்கும் ஈடுபாடு இல்லாததால் இப்படத்தில் இருந்து அவர்கள் நீக்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகின . அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாவிட்டாலும், விக்னேஷ் சிவன் டுவிட்டர் பக்கத்தில் இருந்த அஜித்தின் டிபியை தூக்கியதோடு பயோவில் ஏகே 62-வை நீக்கிவிட்டு விக்கி 6 என மாற்றினார்
விக்கி அடுத்த படத்திற்கான வேலைகளை சைலண்டாக தொடங்கிவிட்டாராம். நானும் ரவுடி தான் படத்தின் பாணியில் அனைவரையும் கவரும் விதமான ஒரு கதையை அவர் தயார் செய்து வருவதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் கசிந்துள்ளன. அப்படம் குறித்த அறிவிப்பையும் அவர் விரைவில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது