துணிவு படத்தில் வில்லன் வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகர்.. அதுவும் வாரசு படத்திற்காகவா.?

0

இளைய தளபதி விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்டத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து இருக்கிறார்.

இந்த படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே, வருகிற 2023 பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு இரு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாவதால், சினிமா வட்டாராத்தில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துணிவு படத்தை நள்ளிரவு 1AM மணிக்கும், வாரிசு படத்தை அதிகாலை 4AM மணிக்கும் திரையிட திட்டமிட்டுள்ளனர்.

மிகப்பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவருவதால் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

இதனிடையே வாரிசு திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் 90 கால கட்டத்தில் அழகான நடிகராக வலம் வந்த நடிகர் ஷாம் நடித்துள்ளார்.

இதனையடுத்து, வாரிசு படத்தில் கமிட்டான சில நாட்களிலேயே துணிவு படத்திலும் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. இதனையும் விட்டு விடக் கூடாது என்பதை உணர்ந்த ஷாம் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் அவரது சில கெட்ட நேரம்

வாரிசு படத்திற்காக கமிட் செய்த அதே தேதியில் துணிவு படத்திற்கும் கால்ஷீட் கேட்டுள்ளார் இயக்குனர் எச். வினோத்.

இதனால், நடிகர் ஷாம் துணிவு படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். இதனை நடிகர் ஷாம் அண்மையில் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *