அந்த விஷயத்திற்கு பின்னர் தான் ஹனிமூன்..? நடிகை மஞ்சிமா மோகன் எடுத்த அதிர்ச்சி முடிவு..!!

0

நவரச நாயகன் கார்த்திக் மகன் கெளதம் கார்த்திக்கும் நடிகை மஞ்சிமா மோகனுக்கும் சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் வைரலாக்கின.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் தற்போதைக்கும் ஹனிமூன் செல்லும் முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளனர். இதற்கு முக்கிய காரணம், ஒல்லியான உடல் அமைப்பைக் கொண்டிருந்த மஞ்சிமா மோகன், சமீப காலமாக உடல் எடை அதிகரித்து குண்டாக காணப்பட்டார்.

இவரை பலரும் சமூக வலைத்தளங்களில் , அவரை கிண்டல் செய்து வந்தாலும் அவர்களுக்கு தரமான பதிலடியும் கொடுத்து தான் வந்திருக்கிறார்.

இந்நிலையில் தான் திருமணம் நடைபெற்ற போது, மேடையிலேயே அவரது நெருங்கிய உறவுகளே குண்டான உடல் அமைப்பை காரணம் காட்டி அவரை, கேலி கிண்டல் செய்திருப்பதாக தெரிகிறது.

இதனை பார்த்த கௌதம் கார்த்திக் மிகவும் மனமுடைந்து போனதை, மஞ்சிமா மோகன் பார்த்தாக தெரிகிறது.

இதனால் தான், தன் கணவரின் வருத்தத்தை போக்க ஒரு அதிரடி முடிவை தற்போது எடுத்திருக்கிறார், அதாவது மஞ்சிமா தனது, உடல் எடையை 15 கிலோ வரை குறைப்பது தான் அந்த முடிவு.

அதற்காக அவர் உடற்பயிற்சி, யோகா என்று பல விஷயங்களில் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறாராம். மேலும் தன்னை கேலி செய்த உறவுகளின் முகத்தில் கரியை பூசுவதற்காக அவர் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்து வருகிறாராம்.

நினைத்தபடி உடல் எடையை குறைத்து விட்டு தான் அவர் ஹனிமூன் செல்ல திட்டமிட்டு இருக்கிறார். இதுதான் புதுமண தம்பதிகளின் ஹனிமூன் கேன்சல் ஆனதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *