“2 வருடம் கல்யாணம் ஆன அந்த பிரபலத்துடன் உறவில் இருந்தேன்.” நடிகை ஆண்ட்ரியா பட்டென சொன்ன உண்மை..!!

0

2007ம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்த இவர், அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களிலும் நடித்தார். இதனால், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ஆண்ட்ரியா.

அடுத்தடுத்து படவாய்ப்பு குவிந்த நேரத்தில் இரண்டு வருடங்கள் எந்தவொரு படத்திலும் நடிக்காமல் பிரேக் எடுத்த அவர், அவ்வப்போது சில கவிதைகளை மட்டும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றார்.

இவர் இரண்டு வருடங்கள் இடைவெளி எடுத்ததற்கு ஆண்ட்ரியா கூறியுள்ள காரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான பிரபலம் ஒருவருடன் தகாத உறவில் இருந்த ஆண்ட்ரியா, அவரால் உடலாலும், மனதாலும் அதிகமாக காயம் பட்டுள்ளாராம். இதனால் வாழ்க்கையே இருண்டு போனதால், கவிதை எழுத தொடங்கினாராம்.

மேலும் மன அழுத்தம் அதிகமானதால், ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வந்ததாக கூறிய அவர், குறித்த திருமணமான பிரபலம் யார் என்பதை அவர் கூற மறுத்துள்ளார்.

தற்போது ஒருவழியாக அந்த வலியில் இருந்து மீண்டு, படப்பிடிப்புகள், பாடல்கள், போன்றவற்றில் கவனம் செலுத்தி வரும் ஆண்டிரியா, மாஸ்டர் படத்தின் மூலம் தான் ரீ-என்ட்ரி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *