நடிகை அஞ்சலி காதல், நகைச்சுவை, கோபம், உணர்வு என பல்வேறு வகைகளில் பல பிரபலமான தமிழ் படங்களில் நடித்துள்ளார். ரசிகர்கள் அவரை ஒரு அழகான தமிழ் பேசும் நடிகையாக பார்க்கிறார்கள், அவர் திரையில் ஒரு சிறந்த நடிகையாகவும் இருக்கிறார்.
இந்தப் பெண் நடிக்கிறாரா அல்லது உண்மையில் அந்த கதாபாத்திரமாகிவிட்டாரா என்று வியக்கும் அளவுக்கு அவர் தனது பாத்திரங்களை சுமந்து செல்கிறார்.
இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, வீட்டில், என் திருமணத்தைப் பற்றி அடிக்கடி கேட்கிறார்கள். ஒவ்வொரு முறையும், நான் கமிட் ஆன படங்களின் பெரிய பட்டியலை அவர்களுக்குக் காட்டுவேன்.
திருமணத்துக்குப் பிறகும் ஹீரோயின் நடிக்கலாம் என்ற நிலை உள்ளது. ஆனால் இப்போது எனக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை. கண்டிப்பாக எல்லாரிடமும் சொல்லி திருமணம் செய்து கொள்வேன் கூறி இருக்கிறார்.