சினிமாவில் படம் நடித்தோம், போனோம் என்று இருக்கும் நடிகைகளுக்கு மத்தியில் அழுத்தமான கதைகளாக தேர்வு செய்து நடிப்பவர் நடிகை அஞ்சலி.
படங்களின் நடிப்பைத் தாண்டி அவரது சொந்த விஷயங்களுக்காகவும் பல்வேறு சர்ச்சைகளிலும் நடிகை அஞ்சலி சிக்கி இருக்கிறார். அதில் ஒன்று தான் நடிகர் ஜெய்யை காதலித்தது.
எங்கேயும் எப்போதும், பலூன் போன்ற படங்களில் ஒன்றாக நடித்து வந்த இவர்கள் விரைவில் திருமணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் திடீரென பிரிந்தார்கள், என்ன காரணம் என்பது இதுவரை தெரியவில்லை.
தற்போது அஞ்சலி Fall என்ற படத்தில் நடித்துள்ளார். இப்பட புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஞ்சலியிடம் ஜெய்யுடனான காதலால் தான் சினிமா வாழ்க்கை வீணானதா என கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், நான் காதலிக்கிறேன் என்று எப்போதும் சொன்னது கிடையாது. எனக்கு சினிமாவில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். எனவே, என்னைப் பற்றி எழுதுபவர்கள் யாரை வைத்து எழுத வேண்டும் எழுதுபவர்கள் அவர்களே முடிவு செய்து விடுவார்கள்.
ஆனால், அதைப் பற்றி நான் பேசியதும் இல்லை பேசப் போவதும் இல்லை இது போன்ற விஷயத்தை நான் செய்யவில்லை எனவே அதைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும் என தெளிவாக பேசியுள்ளார்.