ஹனிமூன் எங்க போறீங்க.? – நடிகை ஹன்சிகா கொடுத்த அந்த Reaction.. Viral Video..!!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் விஜய், தனுஷ், சூர்யா, என டாப் நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி.
சமீபத்தில் இவரது 50-வது திரைப்படமான ‘மஹா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் அவருக்கு பெரும் ஏமாற்றத்தையே தந்தநிலையில், அடுத்ததாக தனது திருமணம் அறிவிப்பை வெளியிட்டு ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களையும் தன்பக்கம் ஈர்த்தார்.
இதனையடுத்து நடிகை ஹன்சிகாவின் திருமணம் ஒரு வாரம் மிகப்பெரிய கொண்டாட்டமாக, பல கோடி செலவு செய்து ஜெய்ப்பூரில் இருக்கும் கோட்டையில் ஹன்சிகா – சோஹைல் கத்துரியா திருமணம் நடந்து முடிந்தது.
ஹன்சிகாவுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
மேலும் திருமண கொண்டாட்டம் நிறைவு பெற்று இருக்கும் சூழலில் ஹன்சிகாவுக்கு உடனே ஹனிமூன் செல்லும் திட்டம் எதுவும் இல்லையாம்.
சில வாரங்களுக்கு ஷூட்டிங் வேலைகள் இருப்பதால் அதில் தான் அவர் கவனம் செலுத்த இருக்கிறார். அதன் பிறகு தான் கணவருடன் ஹனிமூன் செல்வார் என தெரிகிறது.
திருமணம் முடிந்தபின்னும் தொடர்ந்து நடிப்பேன் என ஹன்சிகா கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஹன்சிகா மற்றும் அவரது கணவர் முதல் முறையாக பொது இடத்திற்கு வந்திருக்கின்றனர்.
அந்த வீடியோ தற்போது வைரல ஆகி வருகிறது. அப்போது பத்ரிகையாளர்கள் ஹனிமூன் பற்றி கேட்க ஹன்சிகா வெட்கப்பட்டு சிரித்துவிட்டு சென்றிருக்கிறார்.
https://www.instagram.com/p/Cl0xOlZDVvA/