இரண்டாவது திருமணம்.? நடிகை மீனா என்ன சொல்லி இருக்காங்கன்னு பாருங்க.. !!

Advertisements

நடிகை மீனா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என இந்திய மொழிகளில் படங்கள் நடித்து பிரபலமானவர். மார்க்கெட் இருந்த வரை நாயகியாக கலக்கிவந்த அவர் பின் படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுவது என இருந்தார்.

இப்போது அதிகமாக அம்மா, அண்ணி போன்ற வேடங்களில் நடித்து வருகிறார். கடைசியாக மலையாளத்தில் த்ரிஷ்யம் 2 படத்தில் மோகன்லாலுக்கு மனைவியாக நடித்திருந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் மீனாவின் கணவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மறைந்தது அனைவருக்குமே கடும் சோகத்தை கொடுத்தது. இப்போது தான் மீனா கணவர் இழப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகிறார்.

இந்த நேரத்தில் தான் நடிகை மீனாவிற்கு விரைவில் இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாகவும், அவரது குடும்ப நண்பரை திருமணம் செய்ய இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வைரலானது.

Advertisements

இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவியதை அடுத்து நடிகை மீனா தற்போது அதற்கு விளக்கம் அளித்திருக்கிறார். அவர் தெரிவித்து இருப்பதாவது, எனது கணவர் இறந்த துக்கத்தில் இருந்தே நான் இன்னும் வெளியே வரவில்லை என தெரிவித்து இருக்கிறார்.

அதற்குள்ளயே இரண்டாவது திருணம் செய்வது பற்றி எல்லாம் பேசுவதா என்றும் நான் இப்போது திரைப்படங்களில் நடிப்பதற்கான கதைகளை மட்டும் தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறேன் என கூறியிருக்கிறார்.

இதை தவிற என் மனதில் தற்போது திருமணம் என்ற எண்ணம் கூட இல்ல, என்னை பற்றி இணையத்தில் பரவும் தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்தியே என கூறியுள்ளார். இதனையடுத்து இந்த வதந்திக்கு தற்போது முற்றிப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 

Advertisements

Leave a Comment