தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பிரியா மணி. பெங்களூருவை சேர்ந்தவராக இருந்தாலும் இவர் அறிமுகமானது தெலுங்கு படத்தில் தான். தெலுங்கில் எவரே அடகாடு படத்தில் பிரியாமணி என்ற கேரக்டரிலேயே நடித்து பிரபலமானார். அதைத் தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழில் அறிமுகமானார்…..
தமிழில் கண்களால் கைது செய் படத்தின் மூலம் ஹீரோயினாக கோலிவுட்டிற்கு அறிமுகமான பிரியாமணி, 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக கார்த்தி ஹீரோவாக அறிமுகமான பருத்திவீரன் படத்தில் பக்கா கிராமத்து பெண்ணாக நடித்த பிரியாமணியின் நடிப்பு பாராட்டை பெற்றது. பருத்திவீரன் படம் பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதினையும், தமிழக அரசின் விருதினையும் பெற்றுத் தந்தது.
பல மொழிகளில் டிவி ஷோக்களில் பங்கேற்றுள்ள பிரியா மணி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் குறும் படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார்.
அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது சேலையை விலக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.
https://www.instagram.com/p/CjpG-drgbuZ/