பிரபல தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதிகம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் பிரபல யூ-டியூபர் சூர்யா தேவியுடன் நண்பராக இருந்து வந்தார்.
அப்போது, 2020ஆம் ஆண்டு திரைப்பட நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்த திருமணத்தை வைத்து, நாஞ்சில் விஜயன் வனிதாவிற்கு ஆதராவாகவும், சூர்யா தேவி வனிதாவிற்கு எதிராகவும் கருத்து பதிவிட்டு வந்துள்ளனர்.
இதில், நாஞ்சில் விஜயனுக்கும், சூர்யா தேவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. வனிதா திருமணம் தொடர்பாக வனிதா விஜயகுமாரும், சூர்யா தேவியும் சமூக வலைதளத்தில் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை வெளியிட்டதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் நாஞ்சில் விஜயன், வனிதா விஜயகுமாருக்கு ஆதரவாக இருப்பதாக கூறி சூர்யா தேவி நாஞ்சில் விஜயனின் அலுவலகத்திற்கு சென்று கேட்டபோது நாஞ்சில் விஜயன், சூர்யா தேவியை கட்டையால் தாக்கியதோடு மட்டுமில்லாமல் சூர்யா தேவியுடன் சென்ற மற்றொரு நபரையும் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து சூர்யா தேவி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் விசாரணைக்கு நாஞ்சில் விஜயன் ஆஜராகாமலும் போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்து வந்தார்.
எனவே, போலீசாருக்கு ஒத்துழைப்பு அழைக்காததால் நாஞ்சில் விஜயனை வளசரவாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.