பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை : 3வது முறையாக வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!!

Advertisements

பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தன. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் வங்கதேச அணியை இந்திய அணி எதிர் கொண்டது.

பெங்களூருவில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே பறிகொடுத்து, 277 ரன்களை எடுத்தது.  அதிகபட்சமாக கேப்டன் அஜய் குமார்50 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார்.

மேலும், சுனில் ரமேஷ் 63 பந்துகளில் 136 ரன்கள் குவித்தார். இதையடுத்து 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வங்கதேச அணி பேட்டிங் செய்தது.

தொடர்ந்து ஆடிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு மொத்தமே 157 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி தொடர்ந்து 3ஆவது முறையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

இந்த முறையிலான போட்டி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இந்திய அணி மட்டுமே கோப்பையை கைப்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் , நமது விளையாட்டு வீரர்களால் இந்தியா பெருமை கொள்கிறது.

பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அணியினருக்கு வாழ்த்துக்கள் மற்றும் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். என கூறியுள்ளார்.

Advertisements

Leave a Comment