கடந்த வருடம் நடந்த பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர்களின் ஒருவர் தான் சுருதி பெரியசாமி. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அதன் பின்னர் விஜய் டிவியில் நடந்த பிக் பாஸ் ஜோடிகள் டான்ஸ் ஷோவிலும் கலந்து கொண்டு தனது நடிப்பு திறனை காட்டி அசத்தினார். இருந்தாலும், அந்த ஷோவில் அவர் ஆடிய நடனம் ட்ரோல்களை சந்தித்தது.
மாடலிங் என்கிற துறை இருக்கிறது என்றே தெரியாமல் அந்த துறையில் நுழைந்து தற்போது, வெற்றிநடை போட்டு வரும் சுருதி பெரியசாமி, அவ்வப்போது தனது ரணகளமான பிகினி ஹாட் உள்ளிட்ட புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை சுண்டி இழுத்து வருகிறார்.
இந்த புகைப்படங்களுக்கு பல எதிர்ப்பு கிளம்பினாலும், அதை எல்லாம் சற்றும் கண்டுகொள்ளாமல் சுருதி இன்ஸ்டாகிராமில் வழக்கம்போல கிளாமர் போட்டோக்கள் தான் அதிகம் வெளியிட்டு வந்தார்.
அதற்கு பலனாகத்தான் தற்போது சுருதிக்கு ஹீரோயின் வாய்ப்பு வந்திருக்கிறது.
ஆம் பிரபல நடிகர் சசிகுமாருக்குத்தான் ஜோடியாக நந்தன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்தின் போஸ்டரும் தற்போது வெளியாகி இருக்கிறது.