லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த கைதி, மாஸ்டர், விக்ரம் திரைப்படம் மெகா ஹிட்டாகியுள்ளதால் தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகவுள்ள தளபதி 67 படத்தின் அப்டேட்ஸ் வெளிவந்துள்ளன.
வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கம் புதிய திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இதற்கான பூஜை வரும் 5-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து 7-ம் தேதி படத்திற்கான Promo படப்பிடிப்பை நடத்துகின்றனர். அந்த படப்பிடிப்பு மூன்று நாட்கள் நடைபெறுகிறது. அதில் விஜய் கலந்துகொள்கிறார்.
அதை முடித்துக்கொண்டு படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் 15 நாட்கள் நடத்த உள்ளனர். ஆனால் அதற்கான தேதி இன்னும் இறுதியாக வில்லை.