“யார் இந்த *****”.. நடிக்க வாய்ப்பு கேட்டு வந்தவரை கெட்ட வார்த்தையில் திட்டிய பாலா.? வைரலாகும் தகவல்..!!

Advertisements

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பாலா. இவர் இயக்கத்தில் அடுத்ததாக வணங்கான் திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் ஹீரோவாக நடித்து வந்த சூர்யா சில காரணங்களால் இதிலிருந்து வெளியேறிவிட்டார். இதனால் தற்போது இப்படத்தில் புதிதாக ஒருவர் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார்.

இயக்குனர் பாலா சில சமயங்களில் சிலரிடம் கடுமையாக நடந்து கொண்டதாக பல செய்திகள் இதுவரை வெளிவந்துள்ளன. ஏன், நடிகர்களிடம் அவர் அப்படி தான் நடந்துகொள்வார் என தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Advertisements

இந்நிலையில், ஒரு முறை பாலாவிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு IAS அதிகாரி ஒருவர் சென்றுள்ளார். பாலா சார் சிறுது நேரத்தில் வந்துவிடுவார் வெயிட் பண்ணுங்க என்று அவரின் அலுவலகத்தில் இருந்த ராமகிருஷ்ணன் என்பவர் கூறியுள்ளார்.

அலுவலகத்திற்கு வந்த இயக்குனர் பாலா, அந்த IAS அதிகாரியை பார்த்து “யார் இந்த *****” என்று தகாத வார்த்தையில் கேட்டுள்ளாராம். இதனால் அந்த அதிகாரி சற்று அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதன்பின் அந்த IAS அதிகாரியிடம் ‘நீ ஒழுங்கா நடிக்கலனா கொரவளைய புடிச்சு கடிச்சிருவேன்’ என்று பாலா கூறியுள்ளார்.

இதன்பின் வெளியே வந்த IAS அதிகாரி, அலுவலகத்தில் இருந்த ராமகிருஷ்ணனிடம் ‘ எனக்கு நடிப்பு வேண்டாம், பென்சன் வாங்கிக்கொண்டு வீட்டிலேயே இருந்து விடுகிறேன் ‘ என்று வருத்ததுடன் கூறினாராம்.

 

Advertisements

Leave a Comment