சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் நடிகை சமந்தா.? எந்த நாட்டுக்குன்னு தெரியுமா..?

0

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை சமந்தா.. சமீத்தில் இவரது நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனிடையே, நடிகை சமந்தா நாக சைதன்யா உடனான நடந்த விவாகரத்துக்கு பிறகு மிகவும் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இப்படியாக அவர், சந்தோஷமமாக இருந்து வந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு இருக்கிறது.

அவருக்கு myositis என்ற அரிய வகை auto immune நோய் வந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, மேலும் மன அழுத்தம் அடைந்தார். இந்த செய்தி ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டு மொத்த சினிமா பிரபலங்களையும் அதிர்ச்சியடையச் செய்தது.

இதனையடுத்து, சினிமாவில் தான் முழுமையாக கவனம் செலுத்தினால், தனக்கு ஏற்பட்ட நிலமையினை சரி செய்து கொள்ள முடியும் என நினைத்து, யசோதா திரைப்படத்தின் புரேமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நான் இன்னும் சாகவில்லை, இந்த கடினமான நோயில் இருந்து நிச்சயம் போராடி மீண்டு வருவேன் என அப்போது அளித்த பேட்டி இணையத்தில் வைரலானது.

இதனிடையே, தான் அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது, இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். இருந்தும் அந்த சிகிச்சை பலன் அளிக்காததால், தற்போது ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது சமந்தா மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாக தற்போது மீடியாக்களில் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

அவர் தென்கொரிய நாட்டுக்கு தான் சிகிச்சைக்கு செல்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே சமந்தா தான் கொரிய ஸ்கின்கேர் காஸ்மெடிக்ஸ் தான் பயன்படுத்தி வருவதாக சமந்தா முன்பே கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *