நடிகை மீனாவிற்கு விரைவில் 2-ஆவது திருமணம்.? மாப்பிள்ளை இவரா..? இணையத்தில் வேகமாக பரவும் தகவல்..!!

0

நடிகை மீனா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என இந்திய மொழிகளில் படங்கள் நடித்து பிரபலமானவர். மார்க்கெட் இருந்த வரை நாயகியாக கலக்கிவந்த அவர் பின் படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுவது என இருந்தார்.

இப்போது அதிகமாக அம்மா, அண்ணி போன்ற வேடங்களில் நடித்து வருகிறார். கடைசியாக மலையாளத்தில் த்ரிஷ்யம் 2 படத்தில் மோகன்லாலுக்கு மனைவியாக நடித்திருந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் மீனாவின் கணவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மறைந்தது அனைவருக்குமே கடும் சோகத்தை கொடுத்தது. இப்போது தான் மீனா கணவர் இழப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகிறார்.

இந்த நேரத்தில் தான் நடிகை மீனாவின் மறுமணம் குறித்து தகவல்கள் பரவி வருகின்றன. மீனாவிற்கு விருப்பம் இல்லை என்றாலும் பெற்றோர்களின் கட்டாயத்தால் மறுமணத்திற்கு அவர் ஒப்புக் கொண்டதாகவும் குடும்ப நண்பரை திருமணம் செய்கிறார் என செய்திகள் பரவுகின்றன.

ஆனால் மீனா தரப்பில் இந்த செய்தி குறித்து முற்றிலும் மறுத்துள்ளனர், இது வதந்தியே என்று கூறியுள்ளனர்.

 

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *