துணிவு படத்தின் 3வது சிங்கிள்.. எப்போது வெளியாகிறது தெரியுமா.. இணையத்தில் வேகமாக பரவும் தகவல்.

அஜித் ரசிகர்களுக்கு இந்த பொங்கல் துணிவு பொங்கல் தான். ரிலீஸிற்கு தயாராகியுள்ள துணிவு படத்தினை திரையரங்கில் காண அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றன.
படத்தின் தமிழக உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்ற வெளிநாட்டு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியது. அதோடு கலைஞர் தொலைக்காட்சி சாட்டிலைட் உரிமையை பெற நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியிட உள்ளது.

ஏற்கனவே இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி சக்கைப் போட்டு வரும் நிலையில் மூன்றாவது பாடல் குறித்த அப்டேட்கள் வெளியாகி இருக்கின்றன.
துணிவு படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் கேங்ஸ்டா (#Gangstaa) என்ற பெயரில் அமைந்துள்ளது என இசையமைப்பாளர் ஜிப்ரான் ட்வீட் செய்துள்ளார்.

மேலும் இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் & பாடகர் சபீர் பாடியுள்ளார் என்றும் ஜிப்ரான் அறிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் தினத்தில் பாடல் வெளியாகும் என கூறப்படுகிறது.
#Gangstaa 💪🏼#கேங்ஸ்டா 💪🏼
— Ghibran (@GhibranOfficial) December 21, 2022
🎤 @ShabirMusic