பல கஷ்டங்களை கடந்து, நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் 6 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இதன்பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்ட இந்த ஜோடிக்கு எதிராக பல சர்ச்சைகள் எழுந்தன. ஆனால், அவை அனைத்திற்கும் நயன்தாரா பதில் கொடுத்துவிட்டார்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா குறித்த செய்திகள் வெளியானலே அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் போய்விடுவார்கள். பொதுவெளியில் எடுத்த ஒரு போட்டோ வெளியானாலே அன்றைய தினத்தில் அவரை வைரலாக்கி விடுவார்கள்.
இந்த நிலையில் நடிகை நயன்தாராவின் நடிப்பில் நாளை வெளிவரவிருக்கும் திரைப்படம் கனெக்ட். இப்படத்தை நயன்தாராவும் அவரது கணவரும், பிரபல இயக்குனருமான விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் அண்மையில் கலந்து கொண்ட நயன்தாரா, பல சுவாரஸ்யமான விஷயங்களை அதில் பகிர்ந்து கொண்டார்.
அப்படியே தன்னுடைய கணவர் தனக்கு கொடுத்த இரண்டு முக்கிய பரிசுகளையும் காட்டினர். வாட்ச் மற்றும் ‘ஏ’ எழுந்துள்ள பிரேஸ்லெட் இரண்டும் தான் நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் பரிசாக கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் உங்கள் கணவர் டச் பண்ற மாதிரி கிப்ட் கொடுத்திருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.