டிக்டாக்கில் கிடைத்த பிரபலத்தின் மூலம் இன்று தமிழகத்தில் மிகப் பெரிய செலிபிரிட்டியாக உயர்ந்து இருக்கிறார் ஜி.பி. முத்து . அவரது வெள்ளந்தித்தனமான பேச்சுகளுக்கு பெரும்பாலான மக்களுக்கு பிடித்து போனதால் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.
இணையதளம் மூலம் கிடைத்த பெயரினை வைத்துக் கொண்டு, விஜய் டிவில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழச்சியில் கலந்து கொண்டு, மேலும் தனது ரசிகர்கள் கூட்டத்தை அதிகப்படுத்தி இருக்கிறார்.
இவர் பொது வெளியில் கடைதிறப்பு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் அந்த இடத்தில் கூட்டம் அலைமோதும்.
இதனிடையே அவர் குடியிருக்கும் வீடு ஓட்டு வீடு என்பது பலருக்கும் தெரியும், அங்கிருந்து தான் தனது வாழக்கைப் பயணத்தை தொடங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் தான் தற்போது அவரது இணையதளப்க்கத்தில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில், புது வீட்டிற்கு பால் காய்ச்சியாச்சு நண்பர்களே என்று பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோ வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.