உடலில் ரத்த அளவை அதிகரிக்க செய்யும் எளிய முறைகள்

Advertisements

Do you know the simple methods to increase the blood level in the body??

உடம்பில் ரத்தம் அதிகரிக்க மற்றும் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க… தினமும் ஏதாவது ஒரு வகையான கீரை வகை சேர்த்து கொள்ளுங்கள். ABC juice பருகலாம்.(ஆப்பிள், பீட்ரூட்,கேரட் jucice செய்து நாட்டுசர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்). முருங்கை கீரை சூப் ,முருங்கை கீரை பொரியல் உண்ணலாம்.

blood level in the body

தினமும் கருப்பு திராட்சை இரண்டு இரவே ஊற வைத்து மறுநாள் அதை சாப்பிட்டு ஊற வைத்த தண்ணீர் அருந்தலாம். அசைவம் என்றால் வாரம் ஒரு முறையோ இரண்டு முறையோ ஆட்டின்சுவரொட்டி,ஈரல் உணவில் சேர்க்கலாம்.

அத்தி பழம், மாதுளை பழங்கள் உண்ணலாம். கருப்பட்டி காபி பருகலாம். சுத்தமான தேனில் பேரிச்சை பழம் ஊறவைத்து தினமும் 2 சாப்பிடலாம். பீட்ரூட் பொரியல், பீட்ரூட் சாறு ,பீட்ரூட் பச்சடி என பீட்ரூட் அதிக அளவில் சேர்த்து கொள்ளுங்கள். வெள்ளை சீனி தவிர்ப்பது நல்லது.அதிக அளவு புளிப்பு சுவை சேர்ப்பது குறைக்கலாம்.

ரத்த அளவை அதிகரிக்க செய்யும் எளிய முறைகள்

மாதுளை பழம்

மாதுளைப்பழத்தில் இரும்புச்சத்து, கால்சியம், புரதம், கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும். ஒரு மாதுளைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை பிரச்னை ஏற்படாது. காலை உணவுடன் சேர்த்து ஒரு டம்ளர் மாதுளை ஜூஸை குடிகலாம். அல்லது காய்ந்த மாதுளை விதை பொடியை 2 டீஸ்பூன் எடுத்து, அதனை வெதுவெதுப்பான பாலில் கலந்து தினமும் ஒரு முறை குடித்து வந்தாலும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

நட்ஸ்

Advertisements

நட்ஸ் எனப்படும் அக்ரூட் கொட்டைப் பருப்பு வகைகளில் ஆரோக்கியம் அளிக்கும் சத்துகள் நிறைந்திருக்கின்றன. இரத்த சோகை இருப்பவர்கள் நட்ஸ் சாப்பிடுவதன் மூலம் அதனைத் தடுக்கலாம். அதிலும் பாதாமை தினமும் உட்கொண்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு வேகமாக அதிகரிக்கும். போலிக் அமிலம், ரிபோபிளேவின், தையாமின் உள்ளிட்ட பி காம்ப்ளெக்ஸ் சத்துகள் நட்ஸில் அதிகமாக இருப்பதால் கர்ப்பிணிகள் உணவில் அதிகமாக சேர்த்துகொள்ளலாம்.

தேன்

தேன் இரத்த சோகையை சரிசெய்ய பெரிதும் உதவியாக இருக்கும். எலுமிச்சை சாறு, ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை விரைவில் குணமாகும். தேன் இரத்த ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுவதோடு உடலில் காப்பர் மற்றும் மாங்கனீசு அளவையும் அதிகரிக்கும். தினமும் உணவில் 100 கிராம் தேன் உணவில் சேர்த்துக்கொண்டால் இரத்த சோகை விரைவில் குணம் ஆகும். மேலும் ஏதாவதொரு பானத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம் .

ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் உட்கொண்டால் இயல்பான ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கலாம். ஆப்பிள்களில் இரும்புச்சத்துடன், உடல்நலத்திற்கு நன்மையை அளிக்கும் பல பொருட்களை வளமையாக உள்ளது. இவைகள் உங்கள் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை ஆரோக்கியமாக வைக்க உதவி புரிகிறது. தினமும் தோலுடன் கூடிய ஒரு ஆப்பிளை கண்டிப்பாக உண்ண வேண்டும். மேலும் கேக்குகள், ப்ரௌனீஸ் மற்றும் பல இனிப்பு பண்டங்களில் ஆப்பிளை சேர்த்தும் சாப்பிடலாம் அல்லது ஜூஸ் செய்தும் அருந்தலாம்.

பேரிட்சை பழம்

பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து ஏராளமாக உள்ளது. 100 கிராம் பேரீச்சையில் 277 கலோரிகள், 0.90 மி.கி இரும்புச்சத்து இருக்கிறது. இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியும் இதில் அதிகமாகக் கிடைக்கும். வைட்டமின் மற்றும் மினரல் நிறைந்த இந்தப் பழம் நரம்புத்தளர்ச்சியைப் போக்கும். மேலும் இது உடலில உள்ள இரத்த சிவப்பணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவும். உலர்ந்த முந்திரிப்பழம், பேரீட்சை பழம், உலர் திராட்சை மூன்றையும் இரவு முழுவதும் பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை ஏற்படாது.

Advertisements

Leave a Comment